5

யதார்த்தம்

விரலுக்கு மை இட்டு அழகு

பார்ப்பார்  பதவி வந்தவுடன்

த்ரோணர் போல்

விரலைக் கேட்பார்

ஆர்வம்

புகைப் படக்காரரே  சற்றுப்

பொறுங்கள் உடனே பதிவு

செய்து பார்க்க இது புகைப்

படமல்ல கர்ப்பம்

போதை

போதைக்கும் எனக்கும்

போட்டியொன்று முளைத்தது

யாரை யார்  முதலில்

நிறுத்துவதென்று?

பிறப்பு

உலகிலேயே உயர்ந்தவன்

தொழிலாளி ( லேபர் )

அதனால்தான்  பிரசவ  வலியை

லேபர் பெயின்    என்கிறார்கள்

உண்மை

அப்பா நீங்க பொய் சொல்லுவீங்களா

என்று கேட்டது குழந்தை

இல்லையென்று சொல்லுவதா

ஆமென்று சொல்லுவதா

குழப்பத்தில் இருந்தேன் நான்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book