6

மகிழ்ச்சி

நான்  முட்டாள் என்று

நிரூபிக்கப்  படும் போதெல்லாம்

மகிழ்கிறேன்  ஏனென்றால்

பல  அயோக்யர்களை பற்றிய

என்  அனுமானம் சரியாகவே

இருந்திருக்கிறது

ஆத்திகம்

என்னையும் படைத்து

உன்னையே இல்லை

என்று சொல்லும்

நா வன்மையும் எனக்களித்த

கடவுளே  நீ  இல்லை

இல்லை இல்லவே இல்லை

படைப்பு

ஒரு முறை விதைத்தேன்

உலகம் வளர்ந்தது

பல முறை அழித்தேன்

ஒன்றும் ஆகவில்லை

வருத்தம்

என் வயது  55

35 வயது என்று

சொன்னால் நம்புகிறார்கள்

வருத்தமாய் இருக்கிறது

35 வயதுக்கரர்கள் என்

போலவா  இருக்கிறார்கள்

வித்தை

பாம்புக்கும் கீரிக்கும்

சண்டை விடுவதாக

வெகு நாட்களாக ஏமற்றிக்

கொண்டிருக்கிறான்

ஒரு வித்தைக்காரன்

பாம்புக்கும்  பாம்புக்கும்

கீரிக்கும்   கீரிக்குமே

சண்டை மூட்டிக்

கொண்டிருக்கிறான்

அரசியல்வாதி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book