1

தீண்டாமை

இறந்தது வெட்டியான் ஆயினும்

தோள் கொடுக்கத் தயார்

காரியம் முடிந்ததும் குளிப்பேன்

அது  தீண்டாமை  அல்ல சுத்தம்

பாமரன் 

பட்டிக்காட்டு மாயை நீக்கி

பட்டணத்து சூட்சுமங்கள்

சொல்லிக் கொடுத்தேன் என்னைப்

பட்டிக் காட்டான்  என்கிறாய்  நீ

தியானம்

ஒருமுகப்படுத்தி ஒற்றைப் புள்ளியில்

குவித்து இரு கை தொழுது

இணக்கமாய் இருக்கும் மனதே ஆழ்நிலை உலகம்

நாகரீகம் 

நாகரீகம் வளர்ந்தது சிந்து நதிக் கரையா

காவிரிநதிக் கரையா  விவாத மாநாடு

தொடருகிறது சிங்காரச் சென்னைக்

கொசுக்கள்  மணக்கும்

கூவம் நதிக்கரையில் 

பருவம் 

பெண்கள் மட்டுமல்ல இப்போதெல்லாம் கணிணி

கூட சீக்கிரம் வயதுக்கு வந்து விடுகிறது

நயகரா  என்று தட்டச்சு செய்தால்

வயகரா என்று எழுதுகிறது 

License

குறும்புக் கவிதைகள் 2 Copyright © 2015 by தமிழ்த்தேனீ. All Rights Reserved.

Share This Book