9

கல்வி 

சீக்கிரம்   டிரஸ் போட்டுக்கோ

ஸாக்ஸ் போடு  ஷூ போடு

டை  கட்டிக்கோ டிபன் சாப்பிடு

ஒருவாட்டி சொல்லும்போதே மனப்பாடம்

செய்யணும்  புரியுதா

கிளம்பு  கிளம்பு  நேரமாச்சு

ஷாட் ரெடி இயக்குனர்  வந்துட்டார்

உறவு

கசடு தேங்காத வெண்ணெய்

அசடு இல்லாத   வெகுளி

வெட்ட இயலாத  உறவு

ஒட்ட இயலாத துறவு

கரை தாண்டாத அலைகள்

அலை  தீண்டாத   கரைகள்

உதடு ஒட்டாத கவிதை

விடுமுறை

பள்ளியில் படிக்கும் போதும்

வேலை செய்த நாட்களிலும்

விடுமுறை எனும் வார்த்தை

செய்த மாயம் எத்தனையோ

விடுமுறை ஆசை அதிகமாக

முற்றிப் போன நிலையில்

விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டேன்

விடுமுறை இப்போது தண்டனையாய்!!

கருவிழி

விரித்த கரு விழியால் அளந்தது  குழந்தை

கையகல இடைவெளியில்  கண் திறந்து

மெய்நிறைந்த  இதழ் விரித்து மண்ணளந்து

வியப்பின் குறியீட்டாய்  பொக்கை வாய் திறந்து

கண்ணிமைக்கும்  கணநேர இடைவெளியில்

இமை மூடித் திறந்தது ஒரு முறை வையமுழுதும்

அதன் கருவிழியில் நிறைந்து ஒளிர்கிறது

அம்மாவின் முந்தானை மட்டும் கைவிடாமல்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book