15

இன்பம்

சொல்ல முடியவில்லை பொல்லாத பூமியில் !

நல்லவர்​ வாழும் நலமான   தொல்லுலகாய்

கள்ளமும், தீமையும் இல்லாது போனால்தான்

எல்லாமே இன்ப மயம்

இலக்கணம்

இலக்கணக் கட்டுக்குள்ளே அடங்காமல் இயல்பாய்

எக்கணம் நினைத்தாலும்  வக்கணையாய் வார்த்தைகள்

காரிருளில்  விளக்காய்  தக்கனவாய் அமைந்து

வரும் வெண்பா அல்ல என்பா

தொடுப்பு

உடுக்கை யிடைபிடித்து உறு தொழில் மாற்றி

இடுக்கைக் களையும்  எண்ணம் போற்றி

நடுக்கை விரல் கொண்டு  நால்வித ஓசைசெய்து

தமிழ்த் தொடுப்பை உறுதி செய்

தனித்திரு

ஆடியிலே கருத்தரித்தால்  சித்திரையில் பிள்ளைவரும்

ஆடிமாதத்துக் கழைக்காத  மாமனை தேடிப் பிடித்து

செருப்பாலடி  என்றோர் பழமொழி –  ஆடவனே

ஆடிமாதம் தனித்திரு விழித்திரு

இல்லறம்

இதமாக பெண்பார்த்து இனிப்பாய் கேசரி

பதமாக  சுவைத்தேன்  நீ தந்த நீரேந்திக்

கொப்பளித்தேன் அதன்சுவை அற்புதம்

புதன் கிழமை கலயாணம் கொட்டு மேளம்

வெண்பா

வெண்பா எழுத வேண்டினார் நானுமே

வெண்பா எழுத முனைந்தேன் –

கருவிளம் கூவிளம்  தேமா புளிமா

என்றெல்லாம் இலக்கணமாம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book